undefined

அதிமுகவுக்கு அதிர்ச்சி: முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் 'தவெக'வில் இணைந்தார்!

 

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட லோகேஷ் தமிழ்செல்வன், தற்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகி தவெகவில் இணைந்துள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் ப. தனபாலின் மகன் மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராக இருந்த நாமக்கல் அருணாச்சலத்தின் மருமகனும் ஆவார். இவருக்கு 'தமிழ்ச்செல்வன்' என்று பெயர் சூட்டியதே எம்.ஜி.ஆர் தான். இவரது திருமணம் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்றது.

அதிமுகவில் ஐடி பிரிவின் அவிநாசி தொகுதிப் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்தார். சொந்தமாக ஐடி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தற்போது தனது தந்தை எம்.எல்.ஏ-வாக இருக்கும் அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிட லோகேஷ் விருப்பம் காட்டியதாகவும், ஆனால் கட்சியில் அதற்குச் சாதகமான சூழல் இல்லாததாலேயே அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தனது கட்சியை அறிவித்த பிறகு, மாற்றுக்கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் தவெக-வை நோக்கி நகர்ந்து வருகின்றனர். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் செல்வாக்குள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த லோகேஷ் இணைந்திருப்பது, அந்தப் பகுதியில் தவெக-வின் கட்டமைப்பை வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தந்தை தனபால் அதிமுகவின் முக்கியப் புள்ளியாகத் தொடரும் நிலையில், மகன் மாற்றுக்கட்சிக்குச் சென்றிருப்பது அதிமுக தலைமைக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!