undefined

பஜ்ரங்க்தள் முன்னாள் நிர்வாகி மோகன்ராஜ் வெட்டிக்கொலை!

 

புதுக்கோட்டை திருக்கோகாரணம் குட்ஷெட் சாலை பகுதியில் வசித்து வந்த பஜ்ரங்க்தள் அமைப்பின் முன்னாள் நிர்வாகி மோகன்ராஜ் நேற்று மர்ம நபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வீட்டில் தாயார் மற்றும் மனைவியுடன் இருந்த போது, கோவையிலிருந்து வந்த நண்பர் என கூறி ஒருவர் வீட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் வாசலில் சில நிமிடங்கள் பேசிய பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து தாக்கி விட்டு குற்றவாளி தப்பியோடியதாக போலீசார் கூறினர். இந்த சம்பவம் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரத்தத்தில் தவித்த மோகன்ராஜை காப்பாற்ற முடியாமல் போனது குடும்பத்தினரை உலுக்கியுள்ளது. தகவலறிந்து வந்த திருக்கோகாரணம் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். கொலை செய்தவர் யார், முன்கூட்டியே திட்டமிட்டதா, தனிப்பட்ட விரோதமா என்ற கோணங்களில் தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மோகன்ராஜின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பகுதியில் பரபரப்பு நிலவியது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!