undefined

வங்கதேச முன்னாள்  பிரதமர் கலீதா ஜியா காலமானார்!

 

 

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு காலமானார். இந்த தகவலை வங்கதேச தேசியக் கட்சி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அவரது மறைவு வங்கதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கலீதா ஜியா, கடந்த நவம்பர் 23 முதல் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுவாசப் பிரச்சினை அதிகரித்து, ஆக்ஸிஜன் அளவு குறைந்த நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுநீரகம் செயலிழந்ததால் டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்ததுடன், இதயக் குழாய் பிரச்னையும் கண்டறியப்பட்டது.

மூன்று முறை வங்கதேச பிரதமராகப் பதவி வகித்த கலீதா ஜியா, நாட்டின் அரசியலில் முக்கியமான தலைவராக விளங்கினார். பெனசீர் பூட்டோவுக்குப் பிறகு முஸ்லீம் நாட்டை வழிநடத்திய இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கே. அரசியல் போராட்டங்கள், சிறை வாழ்க்கை, உடல்நலச் சோதனைகள் அனைத்தையும் கடந்து வந்த அவரது வாழ்க்கை, வங்கதேச வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!