முன்னாள் உணவுத்துறை அமைச்சர் வீராசாமி காலமானார்!
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அருகே உள்ள வெள்ளூர் பெரியகுமுளை கிராமத்தை சேர்ந்தவர் தா.வீராசாமி (88). பட்டதாரியான இவர் பேராசிரியராக பணியாற்றினார். 1971ஆம் ஆண்டு வெள்ளூர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். 1972ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் செயல்பட்டார். பின்னர் எம்.ஜி. ராமச்சந்திரன் மீது கொண்ட ஈர்ப்பால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வில் இணைந்தார்.
அக்கட்சியில் ஒன்றிய அமைப்பாளராக பதவி வகித்தார். 1980ஆம் ஆண்டு ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். 1984ஆம் ஆண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் எம்.ஜி.ஆர் தலைமையில் உணவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை அவர் காலமானார். அவரது உடலுக்கு கட்சியினர் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். அரசியல் வட்டாரத்தில் அவரது மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!