முன்னாள் ஜப்பான் பிரதமர் கொலை வழக்கு… குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு நாரா நகரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிக் கொண்டிருந்த போது, யாமாகாமி என்ற நபர் பின்னால் இருந்து சுட்டார். கடுமையாக காயமடைந்த அபே மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ஜப்பான் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் கடற்படை வீரரான டெட்சுயா யாமாகாமி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். அவர் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி மற்றும் வீட்டில் இருந்த வெடிபொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. கொலையை செய்ததை யாமாகாமி விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கில் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறை போதும் என பாதுகாப்பு தரப்பு வாதிட்டது. ஆனால் இந்த கொலை சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து யாமாகாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. கடும் துப்பாக்கி சட்டங்கள் உள்ள ஜப்பானில் நடந்த இந்த சம்பவம் இன்னும் மக்களை உலுக்கியே வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!