முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது... நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தல்!
தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான மு. கருணாநிதிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் நேற்று நாடாளுன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை திமுக தலைவர்கள் யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்திப் பேசினார்.
திராவிடக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதிலும், சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் கருணாநிதி சாம்பியனாகத் திகழ்ந்தவர் என்று அவர் புகழாரம் சூட்டினார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவர் என்றும், ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகச் செயல்பட்டவர் என்றும் அவர் குறிப்பிட்டார். தான் போட்டியிட்ட அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் என்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் நினைவு கூர்ந்தார்.
இதுவரை தி.மு.க.வைச் சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு உடனடியாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!