undefined

  சபரிமலை தங்க அபகரிப்பு வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. கைது!

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2019-ம் ஆண்டு, சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவுநிலைகளில் பதிக்கப்பட்ட தங்கம் அபகரிக்கப்பட்டது. தங்க கவசத்தை தாமிர கவசமாக மாற்றி திட்டமிட்டு கொள்ளையடித்த இந்த சம்பவம் சமீபத்தில் வெளிவந்தது. சிறப்பு விசாரணை குழுவின் அதிரடி விசாரணையில், அப்போதைய அதிகாரிகள் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தான பொறுப்பில் இருந்தவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

இதுவரை அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் போற்றி, முன்னாள் நிர்வாக அதிகாரிகள் முராரி பாபு, சுனீஷ் குமார், முன்னாள் தலைவரும் ஆணையருமான வாசு, திருவாபரண ஆணையர் பைஜு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது முன்னாள் தேவஸ்தான தலைவர் பத்மகுமாருக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு அவரது தொடர்பு தங்கம் அபகரிப்பு வழக்கில் இருப்பதை உறுதி செய்தது.

போலீஸ் சூப்பிரண்டு சசிதரன் தலைமையில் பத்மகுமார் நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் போற்றியுடன் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்மகுமார் முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளராக இருந்தவர். அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!