undefined

லாரி , கார் மீது மோதி முன்னாள் அமைச்சரின் மகள்   பலி...  பெரும் பரபரப்பு! 

 
 

மத்தியபிரதேசம் ராஜ்பூர் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலா பச்சன் முன்னாள் உள்துறை மந்திரியாக பணியாற்றியவர். இவருடைய மகள் பிரேர்னா பச்சன். நேற்று இரவு நண்பர்கள் 3 பேருடன் காரில் அவர் பயணம் செய்துள்ளார்.

இந்தூர் மாவட்டம் ராணாமண்டல் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லாரி காரின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பிரேர்னா பச்சன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்த இளம்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!