முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி!

 

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான நத்தம் விஸ்வநாதன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதனுக்கு அங்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த ஆரம்ப தகவல்களின்படி, உயர்ந்த ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை அளித்து வருவதால், அவரது ஆரோக்கிய நிலை தற்போது நிலைத்த நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. சிகிச்சை நடவடிக்கைகளுக்குப் பின்னர் உடல்நிலை முன்னேறி வருவதால், சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நத்தம் விஸ்வநாதனின் உடல்நிலை பற்றி தகவல் அறிந்த அ.தி.மு.க. ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள், அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!