“போர்க்குணம் கொண்ட புலி அதிமுக” ... முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆவேசம்!
சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தற்காலிக அவைத்தலைவர் கே.பி.முனுசாமி தலைமையில் தொடங்கியது. கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர் உள்பட பலருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். ஜெயலலிதாவுக்கு பின் புதையலாய் எழுந்தவர் எடப்பாடி பழனிசாமி என்றார். ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமி உருவத்தில் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது என உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அம்மா இல்லையென்றாலும் அண்ணன் இருக்கிறார் என்ற தைரியம் தொண்டர்களுக்கு உள்ளது என்றார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்று அவர் கூறினார். அதிமுகவை சாய்க்க எந்த சக்திக்கும் முடியாது என்றார். வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவது உறுதி என முழங்கினார். அதிமுக இப்போதும் போர்க்குணம் கொண்ட புலி; புலி வேட்டைக்கு கிளம்பி விட்டது எனக் கூறி உரையை நிறைவு செய்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!