undefined

  முன்னாள் எம்பி பெருமாள்  காலமானார்…. இபிஎஸ் ஆழ்ந்த இரங்கல் !

 


 தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவில்  முன்னாள் எம்பியாக இருந்தவர்  பெருமாள் . இவர்  கடந்த சில நாட்களாக உடல் நலகுறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இவர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொருளாளர், முன்னாள் வாரிய துணை தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் வகித்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தின் போது பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.


தமிழகத்தின்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை நாடாளுமன்ற எம்பி ஆக்கினார். மேலும் தற்போது அவர் உடல் நலக்குறைவினால் காலமான நிலையில் அவருடைய மறைவுக்கு அதிமுக   தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவருடைய மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்  ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?