undefined

  

பாகிஸ்தான்  முன்னாள் கேப்டன்   ராஜினாமா!

 

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த முன்னாள் டெஸ்ட் கேப்டன் அசார் அலி, திடீரென தேர்வுக்குழு உறுப்பினர் மற்றும் இளம் வீரர் மேம்பாட்டு தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இதற்கான முதன்மை காரணம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் ராஜிநாமா கடிதம் அனுப்பிய அசார் அலியின் விலகலை, பிசிபி ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் மட்டும் பொறுப்பேற்ற அவர், 12 மாதங்களிலேயே பதவி விலகியிருப்பது ஆச்சரியமாகும். இளம் வீரர்களுக்கான கிரிக்கெட் அகாடமியில் உயர்தர பயிற்சி வழங்க வேண்டும் என்ற அவரது பரிந்துரைகளை பிசிபி பின்பற்றத் தயங்கியதே இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், 2017 சாம்பியன்ஸ் டிராபி வெற்றி அணியின் முன்னாள் கேப்டனான சர்ஃப்ராஸ் அகமத், பாகிஸ்தான் ஷாகீன்ஸ் மற்றும் அண்டர்-19 அணிகளின் பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 97 டெஸ்ட்கள், 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அசார் அலி, 31 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து 12 வெற்றிகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!