undefined

 முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் திடீர் உடல் நலக்குறைபாடு.... மருத்துவமனையில் அனுமதி...  !

 
 

முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் இருந்தபோது இரண்டு முறை மயக்கமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 74 வயதான தன்கர், 2022 முதல் 2025 வரை நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தார். பின்னர் தனிப்பட்ட காரணங்களால் ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவர்கள் தன்கருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துள்ளனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!