அரசு குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக மோசடி... பாஜக பிரமுகர் கைது!
Apr 19, 2025, 21:15 IST
திருப்பூர் மாவட்டம் அவிநாசி, செல்லாண்டியம்மன் கோயில் வீதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் நவீன்குமார் (36). அவிநாசி நகர பாஜக முன்னாள் தலைவர். இவர், அவிநாசி சோலைநகர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி 20-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 லட்சம் வரை பெற்றதாகவும், வீடு வாங்கித் தராமல் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அவிநாசி சூளை அருகே வசித்து வரும் ஆனந்தி என்பவர் அளித்த புகாரின் பேரில், அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, நவீன்குமாரை கைது செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!