கள்ளக்காதலால் விபரீதம்... மனைவியைக் கொன்று 20 அடி பள்ளத்தில் தள்ளிய கணவன்!
கள்ளக்காதலால், கணவனே தன்னுடைய மனைவியின் தலையில் கல்லால் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்து 20 அடி பள்ளத்தில் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் அமைந்துள்ளது மோகன்லால் கஞ்ச் பகுதி. இங்கு சஞ்சய் என்பவர் தன்னுடைய மனைவி சவிதாவுடன் வசித்து வந்தார். இதில் சஞ்சய் தன்னுடைய உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் சாவித்திரிக்கு தெரிய வரவே அவர் தன் கணவருடன் தகராறு செய்துள்ளார்.
இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சவிதாவை ஒரு மாந்திரீகரிடம் அவரது கணவர் அழைத்து சென்றுள்ளார்.பின்னர் அங்கிருந்து வரும்போது தன்னுடைய மனைவியின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்து பின்னர் சேலையால் கழுத்தை இறுக்கியுள்ளார்.
சவிதா உயிரிழந்த நிலையில் பின்னர் உடலை 20 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டுவிட்டார். அங்குள்ள ஒரு பெரிய பள்ளத்தில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த விவரங்கள் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சவிதாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில் சஞ்சயை போலீசார் கைது செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!