மகளிருக்கு இலவச ஆரி ஒர்க் பயிற்சி ஜனவரியில் தொடக்கம்!
தமிழ்நாடு அரசு மகளிர் பொருளாதார மேம்பாட்டை நோக்கி புதிய பயிற்சிகளை அறிவித்துள்ளது.
ஆரி வேலைப்பாடு மற்றும் தையல் பயிற்சி ஜனவரி 5 முதல் 30 நாட்கள் நடைபெறும்.
இந்த பயிற்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ‘சமுதாயத் திறன் பயிற்சிப் பள்ளிகள்’ மூலம் வழங்கப்படும்.
பயிற்சியில் பெண்கள் தையல் அடிப்படைகள், ஆரி வேலை நுணுக்கங்கள், வடிவமைப்பு மற்றும் நவீன டிசைன் முறைகள் கற்றுக்கொள்ளலாம்.
இதன் மூலம் பெண்கள் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டவும், தங்களுக்கென சுய தொழில் தொடங்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
முக்கியமாக, பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் தங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகி கூடுதல் விவரங்களை பெறலாம்.
மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் முன்னுரிமை அடிப்படையில் பயிற்சியில் சேரலாம்.
இது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பெண்களுக்கு வாழ்க்கைத் திறனை மேம்படுத்தும் வாய்ப்பாக இருக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!