நடிகர் பாலா  அட்ராசிட்டி... 24 மணி நேரமும்  இலவச ஆட்டோ சேவை... !

 

நகைச்சுவை  நடிகர் பாலா,  பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் ஆதரவற்ற முதியோர்கள்,   குழந்தைகள் உட்பட  காப்பகங்கள் நடத்தி வருவதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார். இவர் அறந்தாங்கியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் முறையாக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார்.  

தொடர்ந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  கடம்பூர் மலை கிராமத்தில் உட்பட்ட குன்றி மலைப்பகுதியில்  300 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் வசித்து வந்த  மலை கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் ரூ 10 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் சேவையை  நடிகர் பாலா தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார்.   ஈரோடு மாவட்டம் அருகே உள்ள சோளகர் என்ற பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்கும் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார்.  

சென்னையில் தான் முதன்முதலாக தங்கியிருந்த அனகாபுத்தூரில் கடந்த மாதம் மழை,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு  மக்களுக்கு தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் ரூ.3 லட்சத்தை,  அப்பகுதி மக்களுக்கு தலா ரூ1000 வீதம் ரொக்கமாக  வழங்கினார்.இந்நிலையில்,  அனகாபுத்தூர் பகுதி மக்களுக்காக இலவச ஆட்டோ சேவையை நடிகர் பாலா இன்று தொடங்கி வைத்தார்.  இந்த ஆட்டோ முதியோர்கள்,  மாற்றுத்திறனாளிகள் மற்றும் மருத்துவ அவசரத்திற்கு  இலவசமாக இயக்கப்படும்.  இந்த சேவை அனகாபுத்தூர், பம்மல்,  பல்லாவரம்   பகுதிகளில் 24 மணி நேரமும்  செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!