10000 சுகாதார பணியாளர்களுக்கு இலவச இன்புளூயன்சா தடுப்பூசி!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இன்புளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது சுகாதார பணியாளர்களுக்கு இலவச இன்புளூயன்சா காய்ச்சல் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
8,775 பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது குணம் அடைந்து வருகின்றனர். காய்ச்சல் பாதிப்புகள் இந்த நடவடிக்கைகளின் மூலம் படிப்படியாக குறைந்து வருகிறது. முதல்வரின் வழிகாட்டுதலின்படி 'இன்புளூயன்சா' காய்ச்சல் தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க