undefined

 சென்னை முழுவதும் 474 இடங்களில்  இலவச ஒப்பனை அறைகள்!  

 
 

சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் களஆய்வு செய்து இந்த பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வரும் ஜூன் மாத இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கழிப்பிடங்கள் பொதுமக்கள் கட்டணமின்றி பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றன. முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் இதில் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கழிப்பிடத்திலும் தனிப்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்களின் கருத்துகளை பெறவும், குறைகளை உடனடியாக சரிசெய்யவும் கியூஆர் கோடு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!