விபத்து நடந்ததும் இலவச சிகிச்சை… கேரள அரசின் புதிய அறிவிப்பு!
கேரள நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் இன்று சட்டப்பேரவையில் 2026-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ‘கேரளா விபத்து காப்பீட்டுத் திட்டம்’ என்ற புதிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. விபத்து நடந்த உடனே சிகிச்சை செலவைப் பற்றி கவலைப்படாமல் உயிரைக் காப்பதே இதன் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கேரளாவில் சாலை விபத்துகளில் காயமடையும் நபர்களுக்கு முதல் ஐந்து நாட்களுக்கு அரசு சார்பில் முற்றிலும் இலவச சிகிச்சை வழங்கப்படும். அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, இதற்காக தேர்வு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த வசதி அமல்படுத்தப்படும். விபத்தின் தீவிரத்தைப் பொறுத்து அவசர சிகிச்சை செலவுகளை அரசே ஏற்கும்.
இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆம்புலன்ஸ் வசதி அதிகரிப்பு உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. விபத்துக்குப் பிறகான முதல் 48 முதல் 72 மணி நேரம் மிகவும் முக்கியமானதால், 5 நாட்கள் இலவச சிகிச்சை அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!