பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் இந்தியா வருகை - 114 ரஃபேல் விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்து!
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை அவர் பிரதமர் மோடியுடன் மும்பையில் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
குறிப்பாக, ரஃபேல் போர் விமானங்களின் அடுத்தகட்டக் கொள்முதல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவுக்குப் போட்டியாகப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசிக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இந்திய மாணவர்களுக்குப் பிரான்சில் உயர்கல்வி கற்பதற்கான விசா நடைமுறைகள் எளிதாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!