செல்போன் தகராறு… நண்பரைக் கொன்று உடல் எரிப்பு!
விருதுநகர் அருகே ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் விக்னேஷ் (33). திருமணமான இவர், மனைவி பிரிந்து சென்ற நிலையில் தந்தையுடன் ஓட்டல் நடத்தி வந்தார். இவரது நண்பர், விருதுநகர் 116 காலனி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (19). கிருஷ்ணசாமி காதலித்து வந்த இளம்பெண்ணிடம் பொன்ராஜ் விக்னேஷ் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை கிருஷ்ணசாமி கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரம் முன்பகையாக மாறியது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணசாமி, அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வம் (23) உடன் சேர்ந்து பொன்ராஜ் விக்னேஷை தாக்கி கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடலை விருதுநகர் நிறைவாழ்வு நகர் பகுதியில் பாலம் அடியில் உள்ள குப்பையில் போட்டு எரித்துவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவத்தில் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அன்புச்செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!