undefined

கொடைக்கானலில் உறைபனி... 6 டிகிரிக்கும் கீழ் குறைந்த வெப்பநிலை - சுற்றுலாப் பயணிகள் அவதி!

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கமாக நவம்பர் மாதமே குளிர் சீசன் தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு கால மாற்றத்தால் சற்று தாமதமாகத் தொடங்கிய குளிர், இப்போது உச்சத்தை எட்டியுள்ளது.

கொடைக்கானலின் புல்வெளிகள், செடி, கொடிகள் மற்றும் மரங்கள் மீது அதிகாலையில் பனித்துளிகள் உறைந்து வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. இது மலைப்பகுதி முழுவதும் வெள்ளை கம்பளம் விரித்தது போன்ற ரம்மியமான காட்சியைத் தருகிறது.

இன்று அதிகாலை நேரத்தில் நட்சத்திர ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. திறந்தவெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் மேற்கூரைகள் மீது உறைபனி படிந்து காணப்பட்டது.

அதிகாலையில் கடும் குளிரும், சூரியன் வந்தவுடன் கடுமையான வெப்பமும் நிலவுகிறது. மீண்டும் நண்பகலில் மேகங்கள் தரையிறங்கி இதமான சூழல் நிலவுவது என வானிலை அடிக்கடி மாறி வருகிறது. தொடர் விடுமுறை காரணமாகக் கொடைக்கானலில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது.

நடுக்கம்: எதிர்பாராத விதமாக மீண்டும் தொடங்கியுள்ள கடும் குளிரால் சுற்றுலாப் பயணிகள் நடுங்கி வருகின்றனர். அவர்கள் தடிமனான கம்பளி ஆடைகளை அணிந்தபடி ஏரிச்சாலை மற்றும் பூங்காக்களைச் சுற்றி வருகின்றனர்.

அதிகாலை நேரங்களில் உறைபனி நிலவுவதால் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தீ மூட்டி குளிரைக் காயும் நிலையை ஆங்காங்கே காண முடிகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!