வேலை தராத விரக்தி.. உணவகம் முன் தீக்குளித்த சென்னை வாலிபர் - புதுவையில் பயங்கரம்!
புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் இன்று மதியம் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வேலைக்காகத் தற்கொலை முயற்சி மேற்கொண்ட வாலிபரால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.
சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இந்த உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரது செயல்பாடுகள் சரியில்லை எனக் கூறி உணவக நிர்வாகம் அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகத் தனக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி வெங்கடேசன் தினந்தோறும் உணவகத்திற்கு வந்து நிர்வாகத்துடன் தகராறு செய்து வந்துள்ளார். இருப்பினும் நிர்வாகம் அவருக்கு வேலை வழங்க மறுத்து விட்டது.
இன்று காலை மீண்டும் உணவகத்திற்கு வந்த வெங்கடேசன், விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் உள்ள சாலைத் தடுப்பு கட்டை மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். யாரும் தடுத்து நிறுத்தாத நிலையில், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
உடலில் தீப்பற்றி எரியத் தொடங்கியதும், அவர் வெறித்தனமாக அந்த உணவகத்தை நோக்கி ஓடிச் சென்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் உணவக ஊழியர்கள் ஓடி வந்து அவர் மீது தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!