தனிமையில் உல்லாசம்... 600 அடி பள்ளத்தில் உடல்.. ஏற்காட்டை அதிர வைத்த சுமதியின் கொடூர முடிவு!
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் மாயமான இளம்பெண், தனது கள்ளக்காதலனாலேயே கழுத்து இறுக்கிக் கொலை செய்யப்பட்டு, 600 அடி பள்ளத்தில் வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. தாலியைப் பார்சலில் அனுப்பி, காதலி ஓடிவிட்டதாக நாடகமாடிய காதலன் போலீசாரிடம் சிக்கியது எப்படி? இதோ முழு விவரம்.
நாமக்கல் மாவட்டம் சூளங்காட்டு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி (30) மற்றும் ஏற்காடு மாரமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம் (32) ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இதற்கிடையே, சமூக வலைதளங்கள் மூலம் சுமதிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
கடந்த 23ம் தேதி, சுமதியும் வெங்கடேஷும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது சுமதியின் செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பு குறித்து வெங்கடேஷ் கேட்டபோது, சுமதி மழுப்பலாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சுமதி தனது செல்போனை 'லாக்' செய்து வைத்திருந்ததால் ஆத்திரத்தில் இருந்த வெங்கடேஷ், சுமதியின் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு தப்பிக்கத் திட்டம் தீட்டிய வெங்கடேஷ், சுமதியின் கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றி ஒரு பார்சலில் வைத்து, பஸ் டிரைவர் மூலம் சண்முகத்திடம் ஒப்படைக்கச் சொன்னார். "சுமதி உன்னோடு வாழப் பிடிக்காமல் தாலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார்" என நம்ப வைப்பதே அவனது நோக்கமாக இருந்தது. ஆனால், மனைவி தாலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டுச் செல்லும் ஆள் இல்லை என உறுதியாக நம்பிய சண்முகம், வெங்கடேஷ் மீது சந்தேகம் கொண்டு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வெங்கடேஷைப் பிடித்துத் தங்கள் பாணியில் விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். ஏற்காடு - குப்பனூர் சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகே சுமார் 600 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சுமதியின் உடலை மூட்டையாகக் கட்டி வீசியதாகத் தெரிவித்தார்.
வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அழுகிய நிலையில் இருந்த சுமதியின் உடல் மீட்கப்பட்டது. உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளப் பழக்கமும், எல்லை மீறிய கள்ளக்காதலும் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்ததோடு, ஒரு வாலிபரைச் சிறைக்கும் தள்ளியுள்ளது. இந்தச் சம்பவம் ஏற்காடு மலைப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!