undefined

ககன்யான்  திட்டம்… இஸ்ரோ பாராசூட் சோதனை வெற்றி!

 
 

 

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் திட்டத்தில் முக்கிய கட்டமாக பாராசூட் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. விண்கலம் பூமிக்கு திரும்பும்போது வேகத்தை குறைத்து பாதுகாப்பாக தரையிறங்க உதவும் இந்த அமைப்பு, சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது. ராக்கெட் ஸ்லெட் வசதியில் நடத்தப்பட்ட இந்த சோதனை திட்டத்திற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று இந்திய விண்வெளி வீரர்களை தாழ்நிலைச் சுற்றுப்பாதைக்கு அனுப்பி மூன்று நாட்கள் தங்க வைத்து மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வருவது ககன்யான் திட்டத்தின் நோக்கம். 2018ல் பிரதமர் மோடி அறிவித்த இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் தொழில்நுட்ப சவால்களால் தாமதமானாலும், தற்போது திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

2025 டிசம்பரில் முதல் மனிதரில்லா சோதனை ஏவுதல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பல சோதனைகளுக்குப் பிறகு 2027 முதல் காலாண்டில் மனிதர்களுடன் கூடிய விண்வெளிப் பயணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களுக்கு முன் வியோமித்ரா ரோபோ விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. ககன்யான் கனவு, நனவாகும் தருணம் நெருங்கி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!