மனைவியை பணயமாக வைத்து சூதாட்டம்... 8 பேர் இளம்பெண்ணுக்கு செய்த கொடூரம்!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை பகுதியில் கடந்த ஆண்டு திருமணமான இளம் பெண்ணின் வாழ்க்கை கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அவரது கணவர் டேனிஷ், குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்திற்கும் அடிமையாக இருந்தவர். பணம் இழந்து, மனைவியிடம் தனது வீட்டிற்கு சென்று நகை, பணம் வாங்க சொல்லியுள்ளார். மனைவி அதை செய்யவில்லை.
சூதாட்டத்திற்கு போகவேண்டிய அவசரத்தில், பணம் இல்லாததால் டேனிஷ் தனது மனைவியை பணயமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டார். அதே நேரம், சூதாட்டத்தில் தோல்வி அடைந்தார். இதனால் அவரது மனைவியை 8 பேர் கும்பல் ஒப்படைத்தது. அந்த கும்பல், பெண்ணை ஈவு, இரக்கமின்றி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்.
இத்தகைய கொடூர சம்பவத்தில் பெண் பலவீனமான நிலையில் இருந்தார். மேலும், டேனிஷும் கும்பலுடன் சேர்ந்தே அவரை ஆற்றில் தூக்கி வீசினார். தத்தளித்து நீரில் இருக்கும் பெண்ணை கடைசியில் வழியாக சென்றவர்கள் மீட்டனர்.
இது குறித்து இளம்பெண் போலீசில் தனது புகாரில் கூறுகையில், “திருமணம் நடந்த முதல் நாளிலிருந்தே வரதட்சணைக்காக நான் சித்திரவதை செய்யப்பட்டேன். என் கணவர் சூதாட்டத்திற்கு அடிமை. பணம் பெறவில்லை என்பதால் என்னை பணயமாக வைத்தார். பிறகு 8 பேர் எனக்கு பாலியல் வன்கொடுமை செய்தனர். என் மாமனார் இதனால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறி எனது கர்ப்பத்தை கலைத்தார். என்னைக் கொலை செய்யும் நோக்கில் ஆற்றில் தூக்கிவிட்டனர். இறுதியில் சென்றவர்கள் என்னை காப்பாற்றினர். இப்போது வழக்கை வாபஸ் பெற நான் அச்சுறுத்தப்பட்டிருக்கிறேன்.”இந்நிலையில், போலீசார் சம்பவம் குறித்து வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!