இந்தியா Vs நியூஸிலாந்து: 1st ODI... கங்குலி சாதனையை முறியடித்த கோலி!
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வதோதரா கோட்டாம்பி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது.
இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டினார். இது அவரது 309-வது ஒருநாள் போட்டியாகும். இதன் மூலம் 308 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் சாதனையை அவர் முறியடித்தார்.
அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பட்டியலில் கோலி தற்போது 5-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், தோனி, டிராவிட், அசாருதீன் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். தொடர்ந்து விளையாடும் நிலையில், விரைவில் அசாருதீனின் சாதனையையும் கோலி நெருங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!