குப்பை எரிப்பால் புகை மூட்டம்… செங்கல்பட்டில் வாகன ஓட்டிகள் அவதி!
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தினந்தோறும் குப்பை எரிக்கப்படுவதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியுள்ளது. நகராட்சி சார்பில் சுற்றுவட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கு கொட்டி தீ வைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேம்பாலத்தில் எழும் அடர்ந்த புகையால் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக தெரியாமல் ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. அருகிலேயே இரண்டு பள்ளிகள் இருப்பதால் மாணவிகள் நச்சுப் புகையை சுவாசித்து மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகழியை குப்பை கொட்டும் இடமாக மாற்றி தீ வைப்பது சமூக ஆர்வலர்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குப்பை எரிப்பை நிறுத்தி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!