துணிகரம்...  ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில்   4 கியாஸ் சிலிண்டர்கள் தூக்கிக் கொண்டு ஓடிய மர்ம நபர்கள்... பகீர் சிசிடிவி காட்சிகள்!  

 

தலைநகர் டெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் வீட்டில், பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர்கள் 4 கியாஸ் சிலிண்டர்களைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு மிகுந்த இப்பகுதியில், நீதிபதியின் வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், அங்கிருந்த காலி மற்றும் நிரப்பப்பட்ட சிலிண்டர்களை லாவகமாகத் தூக்கிச் சென்றுள்ளனர்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடர்களைத் தேடி வருகின்றனர். அண்மைக்காலமாக விலை உயர்ந்த பொருட்களைத் தவிர்த்து, சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் திருடி கறுப்புச் சந்தையில் விற்கும் கும்பல் அதிகரித்து வருவதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர். நீதிபதியின் வீட்டிலேயே இத்தகைய துணிகரத் திருட்டு அரங்கேறியுள்ளது, அப்பகுதி மக்களிடையே பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!