undefined

 பண்டிகை காலங்களில்   இலவச கேஸ் சிலிண்டர் ... முதல்வர் அதிரடி அறிவிப்பு! 

 
 

முதலமைச்சர் ரேகா குப்தா, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளில் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. ஒரு சிலிண்டருக்கு ரூ.853 தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் டெல்லி அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றாகும். BPL மற்றும் NFSA திட்டங்களின் கீழ் உள்ள குடும்பங்கள் இதன் பயனாளிகளாக இருப்பர். பண்டிகை காலங்களில் சமையல் எரிவாயு செலவு அதிகரிப்பதால், இலவச சிலிண்டர் வழங்குவது ஏழை குடும்பங்களுக்கு நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் முழுவதும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. DBT முறையின் மூலம் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதனால் இடைத்தரகர் தலையீடு குறையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!