undefined

நாளை காஸா–எகிப்து ராஃபா எல்லை மீண்டும் திறப்பு!  

 

காஸா–எகிப்து இடையிலுள்ள ராஃபா எல்லைப்பாதை, 2024 மே மாதம் இஸ்ரேல் படைகள் கைப்பற்றிய பின்னர் சுமார் ஒன்றரை ஆண்டுகள் மூடப்பட்டிருந்தது. தற்போது, பிப். 1 (ஞாயிற்றுக்கிழமை) முதல் மக்கள் போக்குவரத்துக்காக இந்த வழித்தடம் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்கு காரணமாக, காஸாவில் கடைசியாக சிக்கிய இஸ்ரேல் பிணைக்கைதியின் உடல் அண்மையில் மீட்கப்பட்ட நிகழ்வைக் குறிப்பிடலாம்.

இதனால், போரால் காஸாவிலிருந்து வெளியேறிய மக்கள் தாயகத்திற்குத் திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், இதற்கான முன்கூட்டிய பாதுகாப்பு அனுமதியை இஸ்ரேல் வழங்க வேண்டும் என்றும், எகிப்துடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைக்கு நாளொன்றுக்கு சுமார் 150 பேரை மட்டுமே அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து எகிப்துடன் இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!