“வீட்டை விட்டு வெளியே வா விஜய்!” - நீலாங்கரையில் திரண்ட கூட்டத்தால் பரபரப்பு!
Feb 13, 2026, 13:25 IST
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் சென்னை நீலாங்கரை இல்லத்தின் முன்பு திடீரென மக்கள் மற்றும் சில அமைப்பினர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "விஜய் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்" என முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற த.வெ.க மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று விஜய்யின் இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையான இழப்பீடு மற்றும் கூடுதல் நிதி உதவி வழங்கப்பட வேண்டும். மாநாட்டு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு கட்சித் தலைமை பகிரங்கமாகப் பொறுப்பேற்க வேண்டும்.
போராட்டக்காரர்கள் விஜய்க்கு எதிராக "வெளியே வா விஜய்" என ஆவேசமாக முழக்கமிட்டதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க நீலாங்கரை இல்லத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக 15-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியான திமுக இருப்பதாக த.வெ.க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய்யின் அரசியல் வருகையை முடக்கவே திட்டமிட்டு இத்தகைய போராட்டங்கள் தூண்டப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!