undefined

 மதுரை வானில் பறந்த ராட்சத பலூன்… பெரும் பரபரப்பு!

 
 

மதுரை அருகே திடீரென வானில் ராட்சத பலூன் பறந்ததால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் மூலம் வான் சுற்றுலா திட்டத்தை தனியார் நிறுவனம் ரூ.6 ஆயிரம் கட்டணத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால் போதிய வரவேற்பு இல்லாததால் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அதே நிறுவனம் ரூ.15 ஆயிரம் கட்டணத்தில் மதுரை பகுதியை 10 கிலோமீட்டர் சுற்றளவில் பலூனில் பறந்து பார்வையிடும் புதிய திட்டத்தை அறிவித்தது.

இந்த திட்டத்திற்காக ஏழு பேர் கொண்ட குழுவினர் நேற்று அழகர்கோவில் பகுதியில் இருந்து ராட்சத பலூனை சோதனை ஓட்டமாக பறக்கவிட்டனர். திடீரென வானில் பலூன் பறந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பலூன் வடபழஞ்சி பகுதியில் உள்ள வயலில் தரையிறங்கியது.

பலூன் தரையிறங்கியதும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இது தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த வான்வழி சுற்றுலா சோதனை ஓட்டம் என தெரியவந்தது. பின்னர் ஊழியர்கள் பலூனை சரிசெய்து மீண்டும் பறக்கவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!