7 அடி ஆழத்திற்கு மீண்டும் ராட்சத பள்ளம்… அடுத்தடுத்து பகீர்!
சென்னைக்கு அருகே அம்பத்தூர் கருக்கு முக்கிய சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. ஏற்கனவே பல முறை பள்ளம் விழுந்த இந்த இடத்தில், தற்போது ஏழு அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கழிவுநீர் கால்வாயில் நீர் கசிவு காரணமாக மண் அரிப்பு ஏற்படுவதே முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது. ஒரே இடத்தில் நான்காவது முறையாக பள்ளம் விழுந்திருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை கருக்கு, மேனாம்பேடு, கள்ளிக்குப்பம் பகுதிகளுடன் இணைக்கும் ஒரே முக்கிய சாலை இதுதான். இந்த சாலை மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. முன்னறிவிப்பு இல்லாததால் பலர் மாற்றுப் பாதை தெரியாமல் சிக்கி தவித்தனர். முதல் இரண்டு நாட்கள் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் கடும் நெரிசலும் ஏற்பட்டது.
தற்போது இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் அளவுக்கு சிறிய பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஆட்டோ அல்லது கனரக வாகனம் வந்தால் போக்குவரத்து முற்றிலும் நின்றுவிடுகிறது. மாநகராட்சி மற்றும் மெட்ரோ நிர்வாகம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டாலும், நிரந்தர தீர்வு இன்னும் இல்லை. அடிக்கடி பள்ளம் விழும் இந்த சாலைக்கு மாற்றுச் சாலை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!