undefined

 முட்டைக்கோஸ் சாப்பிட்ட பள்ளி மாணவி பலி... பெரும் சோகம்!

 

ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட முட்டைக்கோஸை சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மாமாவுக்கு சொந்தமான வயலில் விளைந்திருந்த முட்டைக்கோஸ் இலைகளை சிறுமி அறியாமலே பறித்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

முட்டைக்கோஸ் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுமிக்கு குமட்டல் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலை முன்னேறாமல், டிசம்பர் 24ஆம் தேதி சிறுமி உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவம் குடும்பத்தினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படும் காய்கறிகளை கவனமின்றி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!