undefined

 மாரடைப்பால் காலமான தாய்... காலில் விழுந்து ஆசி பெற்று கண்ணீருடன் பொதுத் தேர்வுக்கு வந்த மாணவி!

 
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை  வெட்டுவாக் கோட்டை கிராமத்தில் ராமாபுரம் பகுதியில் வசித்து வருபவர்  ராஜேந்திரன் - கலா தம்பதியினர். இவர்களது 3 வது மகள் 17 வயது  காவியா.   இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 (உயிரியல் பாடப் பிரிவு) படித்து வருகிறார்.

காவியாவின் தாய் கலா, இன்று அதிகாலை திடீரென மாரடைப்பால் காலமானார்.  அவரது உடல் தற்போது வீட்டில் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாணவி காவியாவுக்கு இன்று காலை உயிரியல் பாடத்தின் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது . இந்நிலையில்  தாய் உயிரிழந்த சோகத்துடன் பொதுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றுள்ளார் காவியா.


பள்ளிக்குச் செல்வதற்கு முன்னதாக, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தாயின் காலில் விழுந்து அழுதபடி ஆசிர்வாதம் பெற்றுச் சென்றார். காவியாவுக்கு சக மாணவிகள் ஆறுதல் கூறி தேர்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தாயின் மறைவு குறித்து மாணவி காவியா  "நான் ஒவ்வொரு முறையும் தேர்வெழுத செல்லும்போது என் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவேன். அப்போது அவர்கள் எனக்கு வாழ்த்துச் சொல்வார். படிப்பு முக்கியம், நன்றாக படிக்க வேண்டும் எனக் கூறுவார்கள். இன்று எனது தாய் இறந்துவிட்டார். எனக்கு படிப்பு முக்கியம் என்பதால் நான் இன்று தேர்வு எழுத வந்துள்ளேன்" என கண்ணீருடன்  கூறினார்.


காவியாவின் தந்தை ராஜேந்திரன் மனவளர்ச்சி குன்றியவர். காவியாவுக்கு காயத்ரி என்ற மூத்த சகோதரியும், திருச்செல்வம் என்ற மூத்த சகோதரரும் உள்ளனர். திருச்செல்வம் கல்லூரியில் 2ம் ஆடு பி.ஏ. படித்து வருகிறார். காயத்ரிக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. ராஜேந்திரன் மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உதவி செய்ய வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?