திருமணத்திற்கு மறுத்த காதலி... வெறித்தனமாக கொன்ற இளைஞன்!
காதலுக்கு மறுப்புத் தெரிவித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், இளைஞர் ஒருவர் தனது காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம், உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையைச் செய்துவிட்டுத் தப்பி ஓடிய இளைஞரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா (வயது 26) என்ற இளைஞர், உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அதே தொழிற்சாலையில், அம்ரோஹா பகுதியைச் சேர்ந்த சோனு (வயது 25) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார். பணி நிமித்தமான பழக்கம் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, பல மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், தன்னை விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி காதலி சோனுவிடம் கிருஷ்ணா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், சோனு திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்து வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளன.
நேற்று (நவம்பர் 28) கிருஷ்ணா, சோனு தங்கியிருந்த வாடகை வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வைத்துத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சோனு திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்ததால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற கிருஷ்ணா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காதலி சோனுவைத் திடீரெனச் சுட்டார்.
இதில், இரத்தம் வெள்ளத்தில் சரிந்து விழுந்த சோனு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சோனுவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொடூரச் செயலைச் செய்துவிட்டுத் தப்பியோடிய இளைஞர் கிருஷ்ணாவை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!