undefined

 பெங்களூருவில் சூட்கேசில் சிறுமி சடலம்... பெரும் பரபரப்பு!

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  புறநகர் பகுதிகளில்  சந்தபுரா ரயில்வே பாலம் அருகே யாரும் கண்டுகொள்ளாமல் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்துவந்த காவல்துறையினர்  சூட்கேசை சோதனை செய்து பார்த்தபோது அதில் ஒரு சிறுமியின்  சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  

அந்தசிறுமி வேறு ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும்,  அவரது உடல் சூட்கேசில் அடைக்கப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.  அந்த சிறுமியின் சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

சூட்கேசில் வேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுமி யார்? அவரது வயது, ஊர் குறித்த மற்ற தகவல்கள் என்னென்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்படி முதற்கட்டமாக காணாமல் போன பெண்கள் பற்றிய வழக்குகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது