undefined

தங்கம் விலை சவரன் ரூ.1,06,000யை தாண்டியது... தை பிறந்தால் குறையுமா? இல்லத்தரசிகள் கவலை!

 

தங்கத்தின் மீதான மோகம் தமிழர்களுக்கு என்றும் குறையாது. ஆனால், இன்றைய விலை உயர்வு சாமானிய மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களால், ஆபரணத் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

நேற்று சவரன் ₹1,05,360-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று போகிப் பண்டிகையன்று அதிரடியாக ₹880 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் (22 கேரட்): ₹1,06,240 ஒரு கிராம் (22 கேரட்): ₹13,280.

கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்த தங்கம், இன்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் இந்த விலையேற்றத்தைக் கண்டு மலைத்துப் போயுள்ளனர்.

தங்கத்தை விட வெள்ளி விலை இன்று மிக மோசமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கிலோவுக்கு ₹15,000 அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி: ₹307. ஒரு கிலோ வெள்ளி: ₹3,07,000

சர்வதேசச் சந்தையில் டாலரின் மதிப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அரசியல் பதற்றங்கள் (குறிப்பாக ஈரான் போராட்டம் மற்றும் இஸ்ரேல் விவகாரம்) காரணமாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது உலகளாவிய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதுவே இந்தியாவிலும் எதிரொலித்து விலையைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!