undefined

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம், வெள்ளி விலை... அதிர்ச்சியின் உச்சம்! 

 

கடந்த டிசம்பர் 15-ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை கடந்தது. அதன் பின்னர் விலை குறைந்தாலும், 22-ம் தேதி முதல் மீண்டும் ஏற்றம் காண தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்விலேயே தங்கம் விலை இருந்து வருகிறது.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600-க்கு விற்பனையானது. இன்று காலை மீண்டும் ரூ.1,280 உயர்ந்து ரூ.1,08,880-க்கு சென்றது. மாலையில் மேலும் ரூ.2,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் விலை ரூ.13,900 ஆக உயர்ந்தது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்தது. ஒரே நாளில் வெள்ளி கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.340-க்கு விற்பனையானது. கிலோ விலை ரூ.22,000 உயர்ந்து ரூ.3,40,000 ஆக உள்ளது. பாதுகாப்பான முதலீடு என்ற நம்பிக்கையால் தங்கம், வெள்ளி மீது மக்களின் ஆர்வம் அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!