விண்ணைத் தொட்ட தங்கம் விலை … வெள்ளியும் கடும் உயர்வு!
சர்வதேச சந்தையில் தங்க விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஒரு அவுன்ஸ் தூய தங்கம் 5,000 டாலரை நெருங்கியுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் தங்க விலை சுமார் 400 டாலர் உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பு உயர்வு, பணவீக்க அழுத்தம் மற்றும் உலக பொருளாதார சூழல் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகை மற்றும் திருமண சீசன் நெருங்குவதால் தங்கத்திற்கு தேவை அதிகரித்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.375-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 உயர்ந்து ரூ.3.75 லட்சமாகியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது. பண்டிகை கொண்டாட்ட செலவுகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். நகை வாங்க நினைப்பவர்கள் சந்தை நிலவரத்தை கவனித்து முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!