தங்கம் அதிரடி சரிவு... நகைப்பிரியர்கள் உற்சாகம்!
உலகளவில் போர் பதற்றம், பணவீக்கம், பங்குச் சந்தை சரிவு போன்ற காரணங்களால் தங்கத்தின் முக்கியத்துவம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்தது. குறிப்பாக ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடந்ததும் விலை திடீரென உயர்ந்தது. பாதுகாப்பான முதலீடாக டாலர் பார்க்கப்படுவதால் தங்கத்தில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று விலையில் கணிசமான சரிவு பதிவாகியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.265 குறைந்து ரூ.15,200 ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ரூ.1,21,660 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இருந்த அதிரடி உயர்வுக்கு பிறகு ஏற்பட்ட இந்த குறைவு வாங்குபவர்களுக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது.
வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.295 ஆகவும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ.2,95,000 ஆகவும் விற்பனையாகிறது. இருப்பினும் சந்தை நிலவரத்தை பொறுத்து மீண்டும் மாற்றம் ஏற்படலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!