வாரத்தின் தொடக்க நாளில் உற்சாகம்...தங்கம் அதிரடி சரிவு!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் முதலே தங்கத்தின் விலை புதுப்புது உச்சம் தொட்டு வந்தது. அதன்படி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலின் பின்னணியில் கடந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை திடீரென உயர்ந்தது. பின்னர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விலை குறைந்து வந்ததால் நகைப் பிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.815ம், சவரனுக்கு ரூ.6,520ம் தங்கம் விலை குறைந்திருந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400க்கும், கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.15,050க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் வாரத்தின் முதல் நாளான இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்திருப்பதால் இல்லத்தரசிகள் ஆறுதல் அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.14,950க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.1,19,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை அன்றைய நிலவரப்படியே மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!