undefined

தங்கம் விலை சரிவு.. நகை பிரியர்களுக்கு கொண்டாட்டம்! 

 
 


கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்திருந்த நிலையில் இன்று காலை வர்த்தக நேரம் துவங்கியதுமே தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது நகைப்பிரியர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சனிக்கிழமை திடீரென சரிவைச் சந்தித்தது.

இந்த ஜூன் மாதம் தொடங்கி 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்த நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,840க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,980க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று ஜூன் 9ம் தேதி காலை வர்த்தகம் துவங்கியதுமே தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.71,640க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.8,955க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது