தங்கம் விலை மீண்டும் உச்சம்.. ஒரு கிராம் ரூ.12,070யை தாண்டியது!
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (டிசம்பர் 1, 2025) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 720 வரை விலை உயர்ந்ததால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வின் விவரம்: 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 12,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் (8 கிராம்) விலை ரூ. 720 வரையில் உயர்ந்து, ரூ. 96,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 12,000-ஐத் தாண்டிச் சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஆபரணத் தங்கம் மட்டுமல்லாமல், தூய தங்கத்தின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது: தூய தங்கம் (24 கேரட்) ஒரு கிராம் விலை ரூ.13,167-க்கும், ஒரு சவரன் விலை ரூ. 1,05,336-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 வரையில் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.196-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,96,000-க்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தை நிலவரங்கள், பணவீக்கம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை இந்த வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!