undefined

 2026ல் தங்கத்தின் விலை மேலும் எகிறும்! விலை உயரும்... வியாபாரிகள் சங்கத் தலைவர் எச்சரிக்கை!

 
 

தங்கத்தின் விலை தற்போது உயர்வில் இருக்கும் நிலையில், வரும் காலங்களிலும் அதன் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என்று தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். புதிய ஆண்டிலும் (2026) தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். தினசரி விலை ஏறினாலும் மறுநாள் குறைகிறது; ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது விலை குறைவதில்லை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது போர் பதற்றம் இல்லாத சூழலிலும் தங்கத்தின் விலை அதிகரிப்பது ஏன் என்பதையும் அவர் விளக்கியுள்ளார். உலகளவில் நிலவும் பொருளாதார மற்றும் வர்த்தகப் போட்டிகள் காரணமாகப் பாதுகாப்பான முதலீடாக மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதே இதற்குக் காரணம். மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் விலை உயர்வுக்கு மிக முக்கியக் காரணமாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கம் பண்டமாற்றுப் பொருளாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் சலானி கூறியுள்ளார். தங்கத்தின் விலை உயர்ந்தாலும், மக்களின் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதால் வாங்கும் சக்தி கூடியுள்ளது. இதனால் சுபகாரியங்களுக்கு வாங்கும் அளவு சற்று குறைந்தாலும், வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிராம் ₹250-ல் இருந்து தற்போது ₹12,500 வரை உயர்ந்திருப்பதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!