புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
2025-ம் ஆண்டு முழுவதும் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை கண்டது. சுமார் 52 முறை புதிய உச்சத்தை தொட்ட தங்கம், சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்து நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடுத்தர குடும்பங்களின் கனவான நகை வாங்கும் திட்டம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
2026 ஜனவரி 1-ம் தேதி தங்கம் விலை திடீரென சரிந்தது. ஒரு கிராம் ரூ.12,440க்கும், சவரன் ரூ.99,520க்கும் விற்பனை ஆனது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகி, சில நாட்களில் மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870 ஆகியுள்ளது. வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.12,000 உயர்ந்து ரூ.2,83,000க்கும், ஒரு கிராம் ரூ.283க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!