ஒரே நாளில் 2 வது முறையாக உயர்ந்த தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று வருகிறது. தினமும் புதிய உச்சம் என்ற நிலை நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கமும் வெள்ளியும் போட்டிப்போட்டு உயர்ந்து வருகிறது. சமீப நாட்களாக காலை, மாலை என இரு நேரங்களில் விலை மாற்றம் காணப்படுகிறது.
இன்று காலை சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.370 உயர்ந்து ரூ.15,330-க்கும், சவரன் ரூ.2,960 உயர்ந்து ரூ.1,22,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்க வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்து ரூ.1,24,880 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கிராம் ரூ.280 உயர்ந்து ரூ.15,610 ஆக உள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.400-க்கும், ஒரு கிலோ ரூ.4 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!