இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம்!
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வுகள் நிலவி வருகின்றன. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,600 வரை குறைந்த நிலையில் இருந்தது. ஆனால் இன்று மீண்டும் விலை உயர்வு பதிவாகியுள்ளது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,280 அதிகரித்து ரூ.1,16,480க்கு விற்பனையாகிறது.அதேபோல், 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.12,450க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.280க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் மீண்டும் உயர்வைத் தொடங்கியுள்ளதால், நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் விலை நிலவரத்தை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!